-குற்றங்கள் குறைவு பொலிஸார் பெருமிதம்-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் திருவிழாவில் தாலிக் கொடினை அறுத்த
பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கம றியில் வைக்கப்பட்டுள்ளார்.
தேர் திருவிழாவில் பெண் ஒருவர் அணிந் திருந்த தாலிக் கொடி திருடப்பட்ட சம்பவம் சி.சி.ரீ.வி கமராக்கள் மூலம் காண்காணிக் கப்பட்டு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான பெண் கொழும்பை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. திருடப்பட்ட தாலிக் கொடியும் மீட்கப்பட் டுள்ளது.
இதேவேளை, நல்லூர் திருவிழா காலத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய சுமார் 10 பெண்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடு விக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் கைரேகை அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்கள் அனை வரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பொலி ஸார் தெரிவித்துள்ளனர். மேலும், நல்லூர் ஆலய சுற்றாடலில் பொலிஸார் 32 இரகசிய கண்காணிப்பு -கமராக்களை பொருத்தி, குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டதாக கூறியுள்ள பொலிஸார்,
இதனால் இம்முறை திரு விழாவில், குற்றங்கள் பாரியளவில் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!